உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெவ்வேறு வழிப்பறி சம்பவங்கள் மாணவர் உட்பட இருவர் கைது

வெவ்வேறு வழிப்பறி சம்பவங்கள் மாணவர் உட்பட இருவர் கைது

விருகம்பாக்கம், வெவ்வேறு வழிப்பறி சம்பவங்களில், இன்ஜினியரிங் மாணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். வடபழனி, தேசிகர் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது, 52; ஆட்டோ ஓட்டுநர். இவர், கடந்த 19ம் தேதி மதியம், தசரதபுரத்தில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். தசரதபுரம் பிரதான சாலை யில் 'டாஸ்மாக்' கடை அருகே செல்லும்போது, ஒருநபர் சையது முகமது ஆட்டோவை மடக்கி பணம் கேட்டு உள்ளார். சையது முகமது மறுக்கவே, கத்திமுனையில் கையால் தாக்கியும் காலால் எட்டி உதைத்தும் உள்ளார். பின், சட்டை பையில் இருந்த 750 ரூபாயை பறித்து தப்பினார். காயமடைந்த சையது முகமது, கே.கே.நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது சாலிக், 51; என்பவரை கைது செய்து, ஒரு கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம் சாலிகிராமம், பெரியார் தெருவைச் சேர்ந்த ரெக்ஸன், 25; சினிமா துறையில் கேமரா உதவியாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அதிகாலையில், கோயம்பேடு - பூந்த மல்லி நெடுஞ்சாலையில், ஏற்கனவே அறிமுகமான திருநங்கையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ரெக்ஸனை மிரட்டி, 200 ரூபாய் பறித்து தப்பினார். அவர் சத்தம் போடவே, சற்று துாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த கோயம்பேடு போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது, மதுர வாயலைச் சேர்ந்த தனியார் கல்லுாரி பொறியியல் மாண வர் ஹரிஹரன், 22, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ