உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரியில் சிக்கி வாலிபர் பலி இருவர் சீரியஸ்

லாரியில் சிக்கி வாலிபர் பலி இருவர் சீரியஸ்

திருவொற்றியூர்:திருவொற்றியூர், அம்சா தோட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்வா, 18. நண்பர்களான சந்தோஷ் மற்றும் கமலேஷ் ஆகியோருடன், 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், நேற்றிரவு எண்ணுார் விரைவு சாலை, சுங்கசாவடி சந்திப்பு - காலடிப்பேட்டை சந்திப்பு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார். திருச்சிணாங்குப்பம் அருகே வரும்போது, திடீரென ஸ்கூட்டர் நிலை தடுமாறி, அருகே சென்றுக் கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் உரசி விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தோஷ் மற்றும் கமலேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !