உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய இருவர் கைது

கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய இருவர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனி, 7வது தெருவை சேர்ந்தவர் இம்ரான், 29; கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, ஜி.என்.டி., சாலையில், 'லாக் அவுட்' என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.கடந்த 28ம் தேதி, இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் மூவர், கடைக்குள் வந்து நான்கு சட்டைகளை எடுத்தனர். அதற்கான பணத்தை கடை உரிமையாளர் இம்ரான் கேட்ட போது, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.அவர் தர மறுக்கவே, நான்கு சட்டைகளுடன் தப்பினர்.இதுகுறித்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட கோகுல் என்பவரை ஏற்கனவே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பழைய குற்றவாளியான ரெட்ஹில்ஸ், எம்.ஜி.ஆர்.நகர், 7வது தெருவைச் சேர்ந்த அப்துல் கபீர், 23, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த அஜித், 25, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ