உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டுனரை கத்தியால் வெட்டி நகை பறித்த இருவர் சிக்கினர்

ஓட்டுனரை கத்தியால் வெட்டி நகை பறித்த இருவர் சிக்கினர்

வியாசர்பாடி, வியாசர்பாடி, பள்ளம் - 1வது தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ், 34; டாடா ஏஸ் ஓட்டுனர். நேற்று முன்தினம் மாலை, வேலைக்கு செல்வதற்காக வீட்டருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், தேவராஜை வழிமறித்து மொபைல் போன் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுக்கவே, மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தேவராஜின் உள்ளங்கையில் வெட்டி, அவரது 4 சவரன் செயின் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பினர்.அக்கம் பக்கத்தினர், காயமடைந்த தேவராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடி, புது தெருவைச் சேர்ந்த சத்யராஜ், 32, பாலாஜி, 24, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ