உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணி முடிந்த இரு சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு

மெட்ரோ பணி முடிந்த இரு சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு

சென்னை, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் முடிந்த இரண்டு சாலைகள், நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் துவங்கவுள்ளது. சென்னையில், 230 கி.மீ., சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இந்த சாலைகள் பலவற்றில் பூமிக்கடியில் சுரங்கம் அமைத்தும், துாண்கள் அமைத்தும், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், இச்சாலைகளில் பராமரிப்பு பணிகளை, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்படைத்துள்ளது. சாலை பராமரிப்பு பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் முறையாக மேற்கொள்ளததால், வாகன ஓட்டிகள், பயணியர், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்கினால், உயிர்பலி ஏற்படும் அபாயமும் உருவானது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சாலைகளை விரைந்து சீரமைக்கும்படி, மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டது. பணிகள் முடிந்த சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, மவுண்ட் - பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலை மற்றும் கோடம்பாக்கம் -ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலை துறையிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் சாலைகள் மேம்பாட்டிற்கு, 200 கோடி ரூபாயை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த நிதியில், மவுண்ட்-பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் 10 கி.மீ., மற்றும் கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதுார் சாலை 4 கி.மீ., புனரமைக்கப்பட உள்ளது. இவற்றுடன், மெட்ரோ ரயில் பணியால் சேதம் அடைந்த மழைநீர் கால்வாய்கள் இணைப்புகள் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகளை, ஓரிரு வாரத்தில் துவக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை