உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.60 லட்சம் பொய் கணக்கு இருவருக்கு 3 ஆண்டு சிறை

ரூ.60 லட்சம் பொய் கணக்கு இருவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கப் பகுதியில் செயல்பட்டு வரும் 'சிகரெட்' வினியோக நிறுவனத்தில், நிர்வாக மேலாளராக, சென்னை ஆவடி பூம்பொழில் நகரைச் சேர்ந்த முரளி,49 என்பவரும், விற்பனையாளராக திருவேற்காட்டை சேர்ந்த சரவணன்,44 என்பவரும் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில், 2008, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், சிகரெட் விற்பனையில் பொய்யான கணக்குகளை காண்பித்து, 60.35 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளனர்.இதுதொடர்பாக நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி, எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, இருவர் மீதும் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை, எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் என்.கோதண்டராஜ் முன் நடந்தது. போலீசார் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வாஷிங்டன் தனசேகர் ஆஜரானார். முரளி, சரவணன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன; எனவே, இருவருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனையும், தலா 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார். இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ