உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூவீலர் திருட்டு: முதியவர் கைது

டூவீலர் திருட்டு: முதியவர் கைது

சேலையூர்: சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்தவர் வருண் கிருஷ்ணா, 22. மே மாதம், கிழக்கு தாம்பரம், ரயில் நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த போது, வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர், வாகனத்தை திருடி சென்றது தெரியவந்து. இதையடுத்து, வேளச்சேரியை சேர்ந்த இளங்கோவன், 64, என்பவரை கைது செய்தனர்.விசாரணையில், இளங்கோவன், 18க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி விற்றதும், சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்த அவர், வேளச்சேரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததும் தெரியவந்தது. தனது ஒரே மகள் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டதால், உணவுக்கு வழியின்றி வாகன திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை