ஹீரோ ஆசிய கோப்பைக்கு உதயநிதி வரவேற்பு
சென்னை, ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு, ஹாக்கி இந்தியா சார்பில், 'ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை - 2025' போட்டி, பீகார் மாநிலம், ராஜ்கிரில் நகரில், ஆக.,29 முதல் செப்.,7 வரை நடக்க உள்ளது. இதில் இந்தியா, மலேஷியா, ஜப்பான், சீனா உட்பட எட்டு ஆசிய நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை முன்னிட்டு, 'ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை'யை, ஏழு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணமாக, ஆசிய கூட்டமைப்பு எடுத்துச்செல்கிறது. ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் முடித்து, தமிழக ஹாக்கி கூட்டமைப்பு தலைமையில், ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை நேற்று, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கோப்பையை, துணை முதல்வர் உதயநிதி வரவேற்றார். விளையாட்டு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், ஆசிய பட்டம் வெல்லும் அணி, 2026ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.