உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பாதாள சாக்கடை பணிகள் தீவிரம்

12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பாதாள சாக்கடை பணிகள் தீவிரம்

ராமாபுரம்,:சென்னை மாநகராட்சி, கடந்த 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட போது, ராமாபுரம், போரூர், மதுரவாயல், நொளம்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து, வளசரவாக்கம் மண்டலம் உருவாக்கப்பட்டது.விரிவாக்கம் செய்யப்பட்ட பின், இப்பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.இதில், ராமாபுரம் 154வது வார்டு, திருமலை நகர் பகுதியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டன.இதனால், அப்பகுதிவாசிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது, திருமலை நகரில் உள்ள நடராஜன் பிரதான சாலை மற்றும் 10க்கும் மேற்பட்ட தெருக்களில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகள் முடிந்த பின், 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அப்பகுதிவாசிகளின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை