உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எதிர்பாராமல் பெய்யும் கோடை மழை ஒக்கியம் மடுவை சீரமைக்க நடவடிக்கை

எதிர்பாராமல் பெய்யும் கோடை மழை ஒக்கியம் மடுவை சீரமைக்க நடவடிக்கை

சோழிங்கநல்லுார், தென்சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள, 64 ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ளம், ஒக்கியம் மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாய் சென்று, முட்டுக்காடு கடலில் சேர்கிறது.தெற்கு திசையில் இருந்து, 52 ஏரிகளின் நீரும், வடக்கு திசையில் இருந்து, 12 ஏரிகளின் நீரும் சேர்ந்து, ஒக்கியம் மடு வழியாக செல்கிறது.ஆனால், தெற்கு திசையில் இருந்து வரும் வெள்ளம், நேராக செல்ல முடியாமல், கூம்பு வடிவில் உள்ள நிலப்பரப்பில் சுற்றி சென்றதால், வெள்ளம் மெதுவாக நகர்ந்து, பாதிப்பு அதிகரித்தது.மேலும், வடக்கு திசையில் இருந்து செல்லும் வெள்ளமும் தடைபட்டது. கடந்த 2024 நவ., மாதம், கூம்பு வடிவில் இருந்த, 2.80 ஏக்கர் காலி இடம் மீட்கப்பட்டு, நேர்வழி பாதையாக மாற்றப்பட்டது.அதிலிருந்து, 610 மீட்டர் நீளம், 15 அகலம், 4 மீட்டர் ஆழத்தில், 26,000 கன மீட்டர் அளவு மண் அகற்றப்பட்டது. இதனால், தென்சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து தப்பியது. ஓ.எம்.ஆர்., சாலையின் குறுக்கே செல்லும் ஒக்கியம் மடுவில், நான்கு துளைகள் இருந்தன. அதில், சில துளைகளை அடைத்து, மெட்ரோ ரயில் பணி நடக்கிறது.இதனால், நீரோட்டம் தடைபட்டு, மண் அகற்றப்பட்ட இடத்தில் அதிக அளவு வெள்ளம் தேங்கியுள்ளது.அதில், ஆகாய தாமரை அதிக பரப்பில் வளர்ந்ததால், கொசு உற்பத்தி அதிகரித்து, நீரோட்டம் தடையாக உள்ளது.கோடையில் எதிர்பாராமல் பெய்யும் மழை, கனமழையாக மாறினால், ஒக்கியம் மடு சீராக இருக்க வேண்டும்.அதற்காக, அங்கு தேங்கிய ஆகாய தாமரையை அகற்றும் பணியில், மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.மேலும், மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்திலும் நீரோட்டத்தை சீராக வைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை