திட்டமிடாத சிறப்பு முகாம் பள்ளிக்கரணையில் நெரிசல்
பள்ளிக்கரணை, பெருங்குடி மண்டலம், 189வது வார்டு பள்ளிக்கரணை, துலக்கானத்தம்மன் கோவில் தெரு சாலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நேற்று நடந்தது. இதற்காக, சாலையை ஆக்கிரமித்து பந்தல் அமைக்கப்பட்டது. தவிர சாலையின் இருபுறமும், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால்,கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகள் கூறுகையில், 'முகாம் நடத்தப்பட்ட சாலை, வேளச்சேரி - தாம்பரம் சாலையை இணைக்கும், முக்கிய வழித்தட ம். இங்கு, வாகனங்களை நிறுத்த திட்டமிடாதது, போக்குவரத்தை சீர்செய்ய போலீசாரை முன்பே வரவழைக்காததே, போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்' என்றனர்.