உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையில் பணிபுரிந்த உ.பி., சிறுவன் மீட்பு

கடையில் பணிபுரிந்த உ.பி., சிறுவன் மீட்பு

பெரம்பூர், சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து, சென்னை டிவிஷன் தொழிலாளர் நலன் உதவி இன்ஸ்பெக்டர் மாலதி, 54, நேற்று முன்தினம் மாலை, பெரம்பூர் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பெரம்பூர் துளசிங்கம் தெருவில் உள்ள சிற்றுண்டி கடையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுவன், நான்கு மாதங்களாக பணிபுரிவது தெரிந்தது.இதையடுத்து, சிறுவனை மீட்ட அதிகாரிகள், ராமாபுரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர். மேலும், சிறுவனை பணிக்கு அமர்த்திய கடை உரிமையாளர் அஜய்குமார், 22, மீது நடவடிக்கை எடுக்குமாறு, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.அதன்படி வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார், அஜய்குமாரை நேற்று கைது செய்து, காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ