உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதிதாக மேம்பாலம் கட்டும் 3 இடங்களில் சாலை வசதியை மேம்படுத்த வலியுறுத்தல்

புதிதாக மேம்பாலம் கட்டும் 3 இடங்களில் சாலை வசதியை மேம்படுத்த வலியுறுத்தல்

சென்னை:மேல்மருவத்துார் - செங்கல்பட்டு இடையே தேசிய நெடுஞ்சாலையில், புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் மூன்று இடங்களிலும், கூடுதல் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, தமிழக போக்குவரத்து துறை வலியுறுத்தி உள்ளது.போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, மேல்மருவத்துார் - செங்கல்பட்டு இடையே தேசிய நெடுஞ்சாலையில், மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், அங்கு போதிய அளவில் சாலை வசதிகள் இல்லை. இதனால், பேருந்துகள் கடும் நெரிசல் சிக்கி, மணி கணக்கில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: உளுந்துார்பேட்டை - சென்னைக்கு வரும் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி பாதை கொண்டது. இந்த சாலையில் எந்த இடையூரும் இல்லாதபோது, பேருந்துகள் தாமதம் இன்றி இயக்கப்படுகின்றன.கடந்த இரண்டு மாதங்களாக மேல்மருவத்துார் - செங்கல்பட்டு இடையே கருங்குழி, படாளம், புக்கத்துறை என மூன்று இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.ஒவ்வொரு இடத்திலும், 1 கி.மீ., துாரம் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து வாகனங்களும் வந்து, அதன்பின்தான் நெடுஞ்சாலையில் செல்கின்றன.இந்த சாலைகள் குறுகியதாகவும், ஒரே நேரத்தில் ஒரு பெரிய வாகனம் செல்லும் வகையில்தான் உள்ளது. இதனால், பேருந்துகள், கார்கள், லாரிகள் நீண்ட துாரம் அணிவகுத்து நிற்கின்றன. மூன்று இடங்களிலும், பேருந்துகளை கடந்து கிளாம்பாக்கம் வருவதற்கு, தினமும் ஒரு மணி நேரம் வரை தாமதமாகிறது.எனவே, இந்த சாலைகளை விரிவாக்கம் செய்யவும், அங்கு காவலர்களை நியமித்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி