முதல்வர் கோப்பை கைப்பந்து வைஷ்ணவா அணி முதலிடம்
சென்னை, கல்லுாரிகளுக்கு இடையிலான முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டியில் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி முதலிடத்தை பிடித்தது. சென்னை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டி, பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், 8, 9ம் தேதிகளில் நடந்தது. கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில் எத்திராஜ், ஒய்.எம்.சி.ஏ., -எம்.ஜி.ஆர்., ஜானகி, ராணி மேரி, ஸ்டெல்லா மேரிஸ், திருத்தங்கல் நாடார் கல்லுாரி உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.அனைத்து போட்டி கள் முடிவில், எம்.ஓ.பி. வைஷ்ணவா, ஒய்.எம்.சி.ஏ., பி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில், 15 -- 5 என்ற புள்ளி கணக்கில் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி, வெற்றி பெற்று முதல் இடத்தை கைப்பற்றியது. எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி அணி, மூன்றாம் இடம் பிடித்தது.