உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வள்ளலார் நகர் பஸ் நிலையம் நாளை முதல் இடமாற்றம்

வள்ளலார் நகர் பஸ் நிலையம் நாளை முதல் இடமாற்றம்

சென்னை: வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில், 10 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், மாநகர பேருந்துகள் இயக்கம், நாளை முதல் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, அண்ணா சதுக்கம், வில்லிவாக்கம், மாதவரம், எண்ணுார், அயனாவரம் உட்பட, பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில், தினமும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இந்த பேருந்து நிலையத்தை, 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவதற்கான பணிகளை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துவங்கி உள்ளது. இந்த பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடித்து, பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வள்ளலார் நகர் பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, இங்கிருந்து 400 மீட்டர் துாரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு எதிரில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, நாளை முதல் 57, 57எக்ஸ், 57ஏ, 48பி, 48பிஎக்ஸ், 48சி, 48கே, 48பி, 547ஏ, 592வி, 48ஏசிடி, 56ஏ, 36எம் ஆகிய வழித்தட பேருந்துகள் இயக்கப்படும். மாதாந்திர டிக்கெட் விற்பனை மையமும் இங்கு செயல்படும். மேலும், 37, 37ஜி, 59 வழித்தட பேருந்துகள் வள்ளலார் நகர் நிலையத்தில் இருந்தே, வழக்கம் போல் இயக்கப்படும் என, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ