மேலும் செய்திகள்
600 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு
13-Sep-2025
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில் தேசிய அனல் மின் கழகம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 1,060 மெகா வாட், மீதி மின்சாரம் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், வல்லுார் மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் நேற்று முன்தினம் இரவு முதல், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
13-Sep-2025