மேலும் செய்திகள்
கேபிள் பதிக்க தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்
11-Aug-2025
சோழிங்கநல்லுார், குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால், குப்பை லாரி அதில் சிக்கியது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு, குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. பல வார்டுகளில், மூன்று பணிகளும் ஒரே நேரத்தில் நடப்பதால், பல தெருக்களை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாததால், மழை பெய்யும்போது, பள்ளம் ஏற்பட்டு உள்வாங்குகிறது. அதனால், இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை பள்ளத்தில் சிக்குகின்றன. சமீபத்தில், துரைப்பாக்கத்தில் ஒரு பள்ளி வாகனம் பள்ளத்தில் சிக்கி, அதில் இருந்த குழந்தைகளை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கண்ணகி நகரில் நேற்று, சரியாக மூடாத பள்ளத்தில் குப்பை லாரி சிக்கி, அதை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, குழாய் பதிக்க பள்ளம் தோண்டினால், அதை முறையாக பலப்படுத்தி மூடும் வகையில், ஒப்பந்த நிறுவனங்களுக்கு, குடிநீர் வாரியம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, பகுதிமக்கள் கூறினர்.
11-Aug-2025