உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி மேம்பால ரயில் மெட்ரோவுடன் விரைவில் இணைப்பு

வேளச்சேரி மேம்பால ரயில் மெட்ரோவுடன் விரைவில் இணைப்பு

சென்னை, சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை தற்போது, தினமும் 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் - பரங்கிமலையையும் இணைக்கும் மேம்பால ரயில் திட்டப்பணி 2008ல் துவங்கி, பல கட்ட பிரச்னைகளுக்கு பின், தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.இந்த தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பெரிய, பெரிய கட்டடங்களாக வணிக நோக்கத்தோடு அமைக்கப்பட்டன. ஆனால், மத்திய ரயில்வே துறை நிர்ணயிக்கும் வாடகை கட்டணம் அல்லது குத்தகைக்கு எடுக்க அதிக கட்டணமாக கொடுக்க நிறுவனங்கள், வியாபாரிகள் முன்வரவில்லை.இதனால், வேளச்சேரி மேம்பால தடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:வேளச்சேரி மேம்பால ரயில் பாதையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவை, ரயில்வே துறை ஏற்றுக்கொண்டுள்ளது.வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான செலவு, நிதி, ரயில்கள் இயக்கம், நிலம், சொத்து மதிப்பு, வருவாய் பங்கீடு உள்ளிட்டவை குறித்து, தெற்கு ரயில்வே அளித்த அறிக்கையை, வாரியம் ஆய்வு செய்து வருகிறது.இதற்கிடையே தமிழக அரசும், இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பி வலியுறுத்தியது. அதன் அடிப்படையில், வேளச்சேரி மேம்பால ரயில் தடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான அறிவிப்பை, மத்திய ரயில்வே முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !