மேலும் செய்திகள்
வங்கி ஊழியரிடம் மொபைல் போன் பறிப்பு
26-Oct-2024
சென்னை, சாந்தோம் சர்ச் வெளியே அமர்ந்து சுகு, 62, என்பவர், 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சர்ச் அருகே உறங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர், சுகு பிச்சையெடுத்து வைத்திருந்த பணத்தை திருட முயன்றார்.சுதாரித்துக் கொண்ட சுகு, பணப்பையை விடாமல் பிடித்ததோடு, அங்கு கிடந்த பிளேடால், மர்ம நபரின் கையை கிழித்தார்.இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர், பிச்சைக்காரரை சரமாரியாக அடித்து உதைத்தது மட்டுமின்றி, அவரது தலையை அருகில் உள்ள சுவற்றில் இடித்து, அங்கிருந்து தப்பிச் சென்றார்.படுகாயமடைந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிச்சைக்காரர் சுகு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.சம்பவம் குறித்து வழக்கு பதிந்த மயிலாப்பூர் போலீசார் விசாரித்து, பிச்சைக்காரரை அடித்து கொன்ற, வேளச்சேரி பாலாஜி நகரைச் சேர்ந்த ஆனந்த், 40, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
26-Oct-2024