உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி.வி.ராமசுப்பையர் பெயரில் விருது வ.உ.சி., தமிழ்ச்சங்கம் வலியுறுத்தல்

டி.வி.ராமசுப்பையர் பெயரில் விருது வ.உ.சி., தமிழ்ச்சங்கம் வலியுறுத்தல்

சென்னை,'தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பெயரில், ஆண்டுதோறும் சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, வ.உ.சி., தமிழ்ச்சங்கத் தலைவர் லட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் அளித்துள்ள மனு:இதழியல் உலகின் மூத்த முன்னோடியும், ஊடக உலகின் பல இதழியலாளர்களை உருவாக்கியவருமான, 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பெயரில், ஆண்டுதோறும் சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்க வேண்டும்.தமிழ் பத்திரிகை உலகில் பல புதுமைகளை புகுத்தி, செய்திகளை தனி பாணியில் வெளியிட்டவர் டி.வி.ராமசுப்பையர். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க, பெரும் போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றி கண்டவர்.இதழியல் துறையில் பெரும் சாதனை புரிந்த அவரை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அவர் பெயரில் சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்க, வ.உ.சி., தமிழ்ச்சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி