ஹாஸ்டல் மாடியில் இருந்து தவறி விழுந்த வார்டன் பலி
துரைப்பாக்கம் ஓ.எம்.ஆரில் உள்ள விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த வார்டன் பலியானார். பரமக்குடியைச் சேர்ந்தவர் ராகவன், 29. இவர், ஓ.எம்.ஆர்., பெருங்குடி, பெத்தேல் அவென்யூவில் உள்ள ஒரு ஆண்கள் விடுதியில் வார்டனாக பணிபுரிந்தார். ஊருக்கு சென்று, நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போதே, விடுதி மாடிக்கு சென்று சக ஊழியருடன் மது அருந்தினார். பின், மாடியில் நின்று, மொபைல் போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில், விடுதியில் இருப்போர், காலையில் எழுந்து பார்த்தபோது, கீழே இறந்து கிடந்தார். மது போதையில் பேசிக் கொண்டிருந்தபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானதாக தெரிகிறது. துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.