உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வளசை - மதுரவாயலில் வழிந்தோடும் கழிவுநீர்

வளசை - மதுரவாயலில் வழிந்தோடும் கழிவுநீர்

வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலம், 149வது வார்டில் ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், பெருமாள் கோவில் அருகே உள்ள பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், பாதாள சாக்கடை மேல் மூடி வழியாக கழிவுநீர் கசிந்து சாலையில் வழிந்தோடி தேங்குகிறது. இதனால், வேகமாக வாகனங்கள் செல்லும்போது, பாதசாரிகள் மற்றும் சாலையோரம் உள்ள கடைகளில் கழிவுநீர் தெறிக்கிறது. அதேபோல், 146வது வார்டு மதுரவாயல் - ஆலப்பாக்கம் பிரதான சாலையில், தனியார் பள்ளி அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, இரு இடங்களில் உள்ள பாதாள சாக்கடை அடைப்புகளை சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை