உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்பரம்பாக்கம் ஏரி மதகில் நீர் கசிவு

செம்பரம்பாக்கம் ஏரி மதகில் நீர் கசிவு

குன்றத்துார், ன்னை மாநகரின் நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 3.64 டி.எம்.சி., கொள்ளளவு நீர் சேகரிக்க முடியும். நீர்மட்டம் 24 அடி.கோடை காலம் துவங்கி உள்ள நிலையிலும், ஏரியில் தற்போது 21 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில், 5 கண் மதகு பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனால், ஏரியில் உள்ள நீர் மெல்ல வெளியேறி வீணாகிறது. தண்ணீர் கசிவை சரிசெய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏரியில் அதிக தண்ணீர் உள்ளதால், அழுத்தம் காரணமாக நீர் கசிவு இருக்கும். இதனால், எந்த பதிப்பும் இல்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி