உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரண்டு நாட்களுக்கு குடிநீர் சப்ளை ரத்து

இரண்டு நாட்களுக்கு குடிநீர் சப்ளை ரத்து

சென்னை,மெட்ரோ ரயில் பணிக்காக புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், 24, 25 ஆகிய தேதிகளில், குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.இதனால், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நடத்தப்படும். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் சேமித்து கொள்ள வேண்டும்.அவசர தேவைக்கு லாரி குடிநீர் பெற, 044 - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை