உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி ரவுடி புளியந்தோப்பில் கைது

வழிப்பறி ரவுடி புளியந்தோப்பில் கைது

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்,45. இவர், நேற்று முன்தினம் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் அருகே நடந்து சென்ற போது, ரவுடி ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.மறுத்ததால், அவரிடம் இருந்து 350 ரூபாயை பறித்துச் சென்றார். இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர்.இதில், பணம் கேட்டு மிரட்டியவர் புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி 'கத்திக்குத்து' தேவராஜ்,32, என தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு அடி நீளமுள்ள கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ