உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2026ல் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

2026ல் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.சென்னையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை. நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்திருக்கிறேன். திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் நல்லகண்ணு. தகைசால் தமிழர் நல்லகண்ணு தனது கருத்துகளை ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தக்கூடியவர். எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும்.

கொள்கை கூட்டணி

இன்றைக்கு இருக்கும் நிலை என்ன என்று கேட்டால், 200 தொகுதிகள் அல்ல 200 தொகுதியையும் தாண்டி வரக் கூடிய அளவுக்கு, நம்முடைய கூட்டணி அமைந்து இருக்கிறது. 7 ஆண்டு காலமாக இந்த கூட்டணியை தொடர்ந்து கடைபிடித்து தேர்தல் களத்தில் நின்று வெற்றியை பெற்று வருகிறோம். இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, மதச்சார்பின்மை கூட்டணி நிரந்தர கூட்டணி என்று அழுத்தமாக சொல்லி, நீங்கள் அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். ஏழு ஆண்டுகள் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

நாஞ்சில் நாடோடி
டிச 27, 2024 17:39

300/300


Naga Subramanian
டிச 27, 2024 15:51

இன்று 25டெக்24 அண்ணா பல்கலை. நாளை எதுவோ? வெற்றி உங்களுக்குத்தான் ஐயா


Amjath
டிச 27, 2024 13:21

இந்த கோமாளிக்கு யாராவது புரியும் படி சொல்லுங்கள். இது பாட்டுக்கு எதையாவது உளறிக்கிட்டு அலையுது.


Rajasekar Jayaraman
டிச 27, 2024 11:48

அண்ணா பல்களை நிகழ்ச்சியை தொடருங்கள் தமிழ்நாடே உங்களோடதாகிவிடும்.


சுலைமான்
டிச 27, 2024 09:24

தூக்கி ஓரமா வைங்கப்பா....


Mohanakrishnan
டிச 27, 2024 06:22

கவுன்சிலர் பதவியை சொல்லுகிறார் ஹஹஹ‌‌ஹ


aaruthirumalai
டிச 27, 2024 05:00

200 பிள்ளைங்க பெற்றுக்கொள்வோம் தவறான வழியில் என்று கூறலாம்.


ஓம் சரவண பவ
டிச 27, 2024 00:57

உங்களையெல்லாம் மொத்தமாக தண்டித்து வீட்டுக்குள் முடக்க தமிழக மக்கள் தயாராக வேண்டும். பாலியல் வன் கொடுமைக்கு முட்டுக் கொடுக்கும் திமுக வினரின் குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இந்த மாதிரி பேசி சமாதானம் ஆகி விடுவீர்களா? உங்களையெல்லாம் முச்சந்தியில் நிற்க வைத்து சாட்டையால் அடித்து தோலை உரிக்க வேண்டும்


PARTHASARATHI J S
டிச 26, 2024 22:34

பாஜக ஏன் மாநில ஆட்சியைக் கலைக்காமல் இருக்கிறது ? புரியவில்லை. துர்சக்தியோடு நடமாடுகிறது.


Nava
டிச 26, 2024 22:31

யதார்த்தத்தை புரிந்து கொள்ள விருப்பமில்லாமல் கற்பனை உலகத்தில் வாழ விடியலுக்கு முழு உரிமை உண்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை