உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டியிடம் செயின் பறிப்பு பெண்ணிற்கு வலை

மூதாட்டியிடம் செயின் பறிப்பு பெண்ணிற்கு வலை

பெரம்பூர், விநாயகபுரம், நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 70. இவர், நேற்று முன்தினம் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, ரயில் மூலம் பெரம்பூர் வந்தார். அங்கிருந்து விநாயகபுரம் செல்ல, தடம் எண்: 142 அரசு பேருந்தில் ஏற முயன்றார்.அப்போது மூதாட்டியின் பின்னால் சென்ற பெண் ஒருவர், மூதாட்டியிடம், 'விரைந்து ஏறுங்கள் பஸ் கிளம்ப போகிறது' என கூறியபடி அவசரப்படுத்தி உள்ளார்.அதேநேரம், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 2 சவரன் செயினை பறித்து மாயமானார். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை