உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போஸ்ட் ஆபீஸ் எங்கப்பா இருக்கு? வாடிக்கையாளர்கள் அவதி

போஸ்ட் ஆபீஸ் எங்கப்பா இருக்கு? வாடிக்கையாளர்கள் அவதி

செங்குன்றம், செங்குன்றத்தில், தபால் நிலையத்தை தேடி வாடிக்கையாளர்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில் நெல் மார்க்கெட் பகுதியில், வாடகை கட்டடத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வந்த செங்குன்றம் தபால் நிலையத்தால், வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக, வடகரை, பாடியநல்லுார், புள்ளிலைன், தீர்த்தகிரியம்பட்டு, அழிஞ்சிவாக்கம், நல்லுார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, இந்த தபால் அலுவலகமே முக்கியமாக உள்ளது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, செங்குன்றம் வள்ளலார் நகர் அருகே ராமலிங்கா நகர், பிரதான சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இங்கும், போதிய இடவசதி இல்லை. தபால் நிலையத்தின் பெயர் பலகை, ஒப்புக்கு வெளியே வைக்கப்படும். மாலையில் மீண்டும் எடுத்து உள்ளே வைத்து விடுகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் தபால் நிலையத்தை தேடி அலைய வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை