உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வெடிகுண்டு மிரட்டல் நேற்று எங்கெங்கு?

 வெடிகுண்டு மிரட்டல் நேற்று எங்கெங்கு?

சென்னை: மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது. அதில், ஓட்டேரியில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீடு, 'கெவின் கேர்' நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் வீடு, 'இந்தியா டுடே' முன்னாள் பத்திரிகையாளர் மணி வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட காவல் துறைக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் மேற்கண்ட வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். எந்த வெடிப்பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதேபோல், ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் பாடகி சின்மயி, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி.,யை வைத்து, மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ