வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஹி.ஹி. iEPF நிறுவன ஆளுங்க உயிரோட இருக்கிற என்னிடமே டெத் சர்டிபிகேட் கேட்டாங்க.
- நமது நிருபர் -: இறந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த, 16 பேர் உட்பட, 30க்கும் மேற்பட்டோர், 'நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம்' எனக்கூறி, அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை முழுதும் இதுபோன்ற பிரச்னையால் பலரும் அலைகின்றனர். அதிகாரிகள் செய்த குளறுபடிதான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மாநிலம் முழுதும், எஸ்.ஐ.ஆர்., எனும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கணக்கெடுப்பு படிவத்தை வீடு வீடாக வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.Galleryஇதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. படிவங்களை ஒப்படைக்க, வரும் 11ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 40.04 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், கணக்கீட்டு படிவத்தை, 38 லட்சம் வாக்காளர்கள் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதில், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தோரின் பட்டியல், பாகம் வாரியாக தயார் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. அவற்றை கட்சி பிரநிதிகள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில், அண்ணா நகர் தொகுதி, 101வது அமைந்தகரை, கதிரவன் காலனியில், 85வது பாகத்தை, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர்.அப்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் உட்பட, 40க்கும் மேற்பட்டோர் இறந்தாக குறிப் பிடப்பட்டு இருந்தது.அவர்களில், 30க்கும் மேற்பட்டோர் உயிரோடு இருக்கும் நிலையில், இறந்ததாக பதிவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, 'நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம்; எப்படி இறந்ததாக குறிப்பிடலாம்' என, 30க்கும் மேற்பட்டோர் நேற்று, அண்ணா நகர் மண்டல அலுவலகம் சென்று, அதிகாரிகளிடம் முறையிட்டனர்.இதுபோன்று, சென்னை யின் பல்வேறு தொகுதிகளிலும் பிரச்னை ஏற்பட்டு, வாக்காளர்கள் அலைந்து திரிகின்றனர். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்காகவே, தீவிர வாக்காளர் திருத்த பணி நடந்து வருகிறது.வாக்காளர் திருத்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, பலரும் ஒப்புகை சீட்டு பெற்றுள்ள நிலையில், அவர்களின் பெயர், இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் அந்த அளவு கவனக்குறைவாக செயல்படுகின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது.இதுபோன்ற குளறுபடிகளை எல்லாம் சரி செய்து, இறுதி வாக்காளர் பட்டியலில் எந்த குழப்பமும் இல்லாத வகையில் வெளியிட வேண்டும் என்பதே, வாக் காளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. உயிருடன் இருப்பவர்கள் இறந்ததாக பட்டியலில் இருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். வாக்காளர் இறுதி பட்டியலில் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காக, இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் பட்டியல் முன்கூட்டியே ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற தவறுகள், பணி அழுத்தம் காரணமாக ஆங்காங்கே நடைபெறும். இந்த தவறுகள் எல்லாம் இறுதி வாக்காளர் பட்டியலுக்குள் சரி செய்யப்படும். - ஜெ.குமரகுருபரன், சென்னை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட தேர்தல் அலுவலர் எங்கள் தெருவில் முதல் வீடே எங்களதுதான். கூட்டுக்குடும்பம் என்பதால், ஒரே வீட்டில் 40 வாக்காளர்கள் உள்ளோம். வாக்காளர் பட்டியலில், 16 பேர் இறந்து விட்டதாக பதிவாகி உள்ளது. அனைவரும் உயிருடன் உள்ளோம். பி.எல்.ஓ., அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து, ஒப்புகை சீட்டும் பெற்றுள்ளோம். முஸ்லிம் குடும்பம் என்பதால் புறக்கணித்து விட்டனரா என்று தெரியவில்லை. எங்கள் பெயரை மீண்டும் இணைக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம். - சுலைமான், 26, கதிரவன் காலனி, அமைந்தகரை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்தவர்கள் என பதிவாகி உள்ளது. என் மாமியார் எம்.ஜி.ஆருக்கே ஓட்டு போட்டவர். இன்னு ம் உயிருடன் உள்ளார். தெருவில் உள்ள பலரும் இறந்ததாக பதிவாகி உள்ளதால், மண்டல அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். - என்.ரகிமா, 38, அமைந்தகரை
ஹி.ஹி. iEPF நிறுவன ஆளுங்க உயிரோட இருக்கிற என்னிடமே டெத் சர்டிபிகேட் கேட்டாங்க.