உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.31 லட்சம் மோசடி: பெண் கைது

எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.31 லட்சம் மோசடி: பெண் கைது

சென்னை மருத்துவக்கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக கூறி, 31.88 லட்சம் பெற்று மோசடி செய்த பெண்ணை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி, 45. கடந்த, 2022ம் ஆண்டு அவரது மகளுக்கு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சீட் வாங்க முயற்சி செய்தார். அப்போது, அவருக்கு தெரிந்த நபர்கள் வாயிலாக, வளசரவாக்கத்தைச் சேர்ந்த, ரம்யா, 37 மற்றும் அந்தோணிதாஸ் அறிமுகமானார். இருவரும் மருத்துவக்கல்லுாரி மற்றும் சுகாதாரத்துறையில் மிகுந்த செல்வாக்கு உள்ளதாகவும், மருத்துவ சீட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பல தவணையாக, 60.50 லட்சம் ரூபாயை வங்கி வாயிலாகவும், ரொக்கமாகவும் பெற்றனர். பின், அவரது மகளுக்கு மருத்துவக் கல்லுாரியில் சீட் கிடைத்து விட்டதாக கூறி, போலியான அனுமதி கடிதத்தை காண்பித்து, விடுதி கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி மேலும், 1.38 லட்சத்தை பெற்றறுள்ளனர். ஆனால், கல்லுாரியில் சேர்க்கவில்லை. போலியான அனுமதி கடிதத்தை காண்பித்து, இருவரும் மோசடி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தியதால், 29.50 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 31.88 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்தைனர். இதுகுறித்து, 2024 ஆக., 27ல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரோஸ்மேரி புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட ரம்யாவை, 37, போலீசார் சோழிங்கநல்லுாரில் வைத்து நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அந்தோணிதாசை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரம்யா, மோசடி வழக்கில் ஏற்கனவே கைதானதும், 2020ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !