வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது
ராஜமங்கலம்:ராஜமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், இரவு நேரங்களில் கள்ள சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக, ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ராஜமங்கலம் முதல் தெருவில், நேற்று அதிகாலை போலீசார் சோதனை செய்தனர். இதில், ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பதுக்கி வைத்திருந்த ராஜேஸ்வரி 58, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.