நடிகர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
கண்ணகிநகர், ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தை சேர்ந்தவர் நடிகர் கருணாகரன். 'சூது கவ்வும், ஜிகர்தண்டா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வீட்டில், பீரோவில் இருந்த, 60 சவரன் நகை திருடுபோனது. பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை. வெளி நபர்கள் வீட்டுக்குள் வரவில்லை. போலீசார் விசாரணையில் வீட்டில் வேலை செய்யும் காரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயா, 44 என்ற பெண், நகை திருடியது தெரிந்தது. பீரோவில் இருந்து சிறுக, சிறுக நகையை திருடி, வீட்டில் வைத்திருந்து, மொத்தமாக விற்க முயன்றபோது, போலீசாரிடம் சிக்கினார். விஜயாவை போலீசார் கைது செய்தனர்.