நகை வாங்குவது போல நடித்து செயின் திருடிய பெண் சிக்கினார்
சென்னை, திருமங்கலத்தில் உள்ள நகைக்கடையில், செயின் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகர், ஐஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர் ஆதாஷ், 25. இவர், திருமங்கலம், நேரு நகரில் மஹாவீர் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு, கடந்த 31ம் தேதி இரவு செயின் வாங்க பெண் ஒருவர் சென்றுள்ளார். ஊழியர் காண்பித்த எந்த செயினும் பிடிக்கவில்லை எனக்கூறி, அங்கிருந்து சென்றுவிட்டார். பின் நகையை சரிபார்த்தபோது, 2 சவரன் செயினை அந்த பெண் திருடி சென்றது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், மேற்கு முகப்பேரைச் சேர்ந்த ஷேக் ஷாஷியா பேகம், 21, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அடகு வைக்கப்பட்டிருந்த, 2 சவரன் செயினை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பெண் தனியார் கல்லுாரியில், எம்.பி.ஏ., படித்துக் கொண்டே, தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது தெரியவந்தது.