உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீக்காயம் அடைந்த பெண் பலி

தீக்காயம் அடைந்த பெண் பலி

சூளைமேடு: அரும்பாக்கம், சத்யா நகரைச் சேர்ந்தவர் சித்ரா, 48. கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று, விளக்கு ஏற்றும்போது, அவரது புடவையில் தீப்பற்றியது. உறவினர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று காலை உயிரிழந்தார். சம்பவம் குறித்து, சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர். குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ஆவடி: திருமுல்லைவாயில், சோழம்பேடு பிரதான சாலையில் உள்ள கடைகளில், ஆவடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேலவன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள செல்வ விநாயகா ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையில், குட்கா பொருட்கள் விற்றது தெரிந்தது. இதையடுத்து, 2.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள், 50,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு 'சீல்' வைத்தனர். ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு வியாசர்பாடி: வியாசர்பாடி, மெகசின்புரத்தைச் சேர்ந்த தினேஷ், 35. தன்னிடம் உள்ள இரு ஆட்டோக்களை வாடகைக்கு விட்டு, தொழில் செய்து வருகிறார். நேற்று, வியாசர்பாடி, நேரு நகர், 3வது தெருவில், ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருந்தார். ஆட்டோவை எடுக்க சென்றபோது, இரு ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர். இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். லாட்டரி விற்ற இருவர் கைது மயிலாப்பூர்: மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், வெளிமாநில லாட்டரி துண்டு சீட்டுகள் வைத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், நந்தனத்தைச் சேர்ந்த சையத் அலி, 32, மயிலாப்பூரைச் சேர்ந்த டேவிட், 52, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 17,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். சில வரி செய்திகள்/வடசென்னை தொழிலாளி மயங்கி விழுந்து பலி புளியந்தோப்பு: வியாசர்பாடி, பி - கல்யாணபுரத்தைrf சேர்ந்தவர் மாரிமுத்து, 63; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பெரம்பூர் பழனி முருகன் கோவில் தெருவில் உள்ள பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து, செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ---------------- கஞ்சா வியாபாரி கைது ஓட்டேரி ஸ்ரீபன்சன் சாலையில், கஞ்சா விற்று வந்த, புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிகரன், 23 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. --------------- மாற்றுத்திறனாளிகள் மனு தரும் போராட்டம் திருவொற்றியூர்: மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையை, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கான கார்டுகளாக மாற்றக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராடி வருகின்றனர். திருவொற்றியூரில் உள்ள, உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று, சங்கத்தின் மாவட்ட செயலர் ராணி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ