உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் காயம்

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் காயம்

தாம்பரம், மேற்கு தாம்பரம், வி.ஜி.என்., குறிஞ்சி நகரை சேர்ந்தவர் தனசேகரன். இரும்புலியூர், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி, 43. இவர்களுக்கு திருமணமாகி, 22 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை, வீட்டின் சுற்றுச்சுவர் அருகே, புவனேஸ்வரி, தனக்கு தானே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த அருகில் இருந்தோர், தீயை அணைத்து, காயமடைந்த மகேஸ்வரியை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக, தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துகொண்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காயமடைந்த மகேஸ்வரி, வீட்டில் இருந்து காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டதாக கூறியதாகவும், ஆனால், சம்பவ இடத்தில் காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை எனவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை