உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோர மண் சறுக்கி பெண் பலி

சாலையோர மண் சறுக்கி பெண் பலி

மறைமலை நகர், ஜூன் 29-காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பிள்ளைபாக்கத்தைச் சேர்ந்தவர் காமேஷ், 25. ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.இவரும், இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த நிஷா, 21, என்ற பெண்ணும், கோவளம் நோக்கி வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், 'யமஹா எம்.டி.,' இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றனர்.வண்டலுார் உயிரியல் பூங்கா எதிரே, சாலையில் கிடந்த மண்ணால் வாகன சக்கரம் சறுக்கி, நிலை தடுமாறி விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காமேஷ், சிறு காயங்களுடன் தப்பினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி