மேலும் செய்திகள்
காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி
10-Oct-2025
மணலிபுதுநகர், மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி, 46, என்பவர் பங்கேற்றார். தேர் அருகே நின்றிருந்த மகேஸ்வரி, தான் அணிந்திருந்த, இரண்டு சவரன் செயினை தவற விட்டார். இது குறித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒலிபெருக்கியில் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், செயினை கண்டெடுத்த மாதவரம், குமாரபுரத்தைச் சேர்ந்த சுந்தர், 39, என்பவர், அதை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, அந்த செயின் மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
10-Oct-2025