உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடில் குட்கா விற்றபெண் கைது

கோயம்பேடில் குட்கா விற்றபெண் கைது

கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில், 'குட்கா' புகையிலையை விற்பனை செய்த, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள், 45, என்பவரை, கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இளைஞரை தாக்கி போன் பறிப்பு கண்ணகி நகர்: காரப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தட பணித்தளத்தில், நேற்று அதிகாலை பீஹாரைச் சேர்ந்த ஹர்சிங், 18, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மூவர், கட்டயைால் அவரை தாக்கி மொபைல் போனை பறித்து சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹர்சிங்கிற்கு, தலையில் ஆறு தையல் போடப்பட்டது. கண்ணகி நகர் போலீசா ர் விசாரிக்கின்றனர். பைக் திருட்டு வாலிபர் சிக்கினார் செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார், காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 25. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது, யமஹா ஆர்15 பைக், சில நாட்களுக்கு முன் திருடு போனது. செம்மஞ்சேரி போலீசாரின் விசாரணையில், சோழிங்கநல்லுார், ஏரிக்கரையைச் சேர்ந்த அரவிந்த், 28, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார், நேற்று அவரை கைது செய்து பைக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ