உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடியை கைது செய்ய வலியுறுத்தி குழந்தைகளுடன் பெண் போராட்டம்

ரவுடியை கைது செய்ய வலியுறுத்தி குழந்தைகளுடன் பெண் போராட்டம்

புதுவண்ணாரப்பேட்டை,ரவுடியை கைது செய்ய வலியுறுத்தி, புதுவண்ணாரப்பேட்டையில் நான்கு குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் குப்புலட்சுமி, 40. தன், நான்கு பெண் குழந்தைகள் மற்றும் தாய் கோமதியுடன் வசித்து வருகிறார். நேற்று மாலை, பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி ஹாரிஸ் என்பவர், மதுபோதையில் குப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு மிரட்டிஉள்ளார். குப்புலட்சுமி மறுக்கவே, இரும்பு ராடால் குப்புலட்சுமியை தாக்கியுள்ளார். நெற்றியில் பலத்த காயமடைந்த குப்புலட்சுமி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஹாரிஸ் மீது புகார் அளித்தா ர். இந்த நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, போலீசாரை கண்டித்து நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தன் நான்கு குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் குப்புலட்சுமி மறியலில் ஈடுபட்டார். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குற்றவாளியை கைது செய்வோம் என, உறுதியளித்ததை அடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி