உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்பு

 தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்பு

சென்னை: மெரினா கடற்கரையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கிய பெண் உடலால், சலசலப்பு ஏற்பட்டது. அண்ணா சதுக்கம் பின்புறம், மெரினா கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல், அழுகிய நிலையில் நேற்று கரை ஒதுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையிலான போலீசார், 35 வயது மதிக்கத்தக்க அந்த உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்து கடலில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள, காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ