உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்கள் குடுமிப்பிடி சண்டை காவல் நிலையம் முன் பரபரப்பு

பெண்கள் குடுமிப்பிடி சண்டை காவல் நிலையம் முன் பரபரப்பு

ஓட்டேரி: காவல் நிலையம் முன் பெண்கள் சண்டையிட்டதில் ஒருவர் மண்டையை செங்கல்லால் உடைத்த பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர். புரசைவாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 50. இவர், 76வது வார்டு துாய்மைப் பணியாளர். இவரது மனைவி சாந்தி, 43. இவர், 73வது வார்டு துாய்மைப்பணியாளர். வசந்தியின் கணவருக்கும், ஓட்டேரி, செல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கருதி, நேற்று முன்தினம் மதியம் ஆர்த்தியின் வீட்டிற்கு சென்று சாந்தி தகராறு செய்துள்ளார். இது குறித்து, ஆர்த்தி ஓட்டேரி காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளிக்க சென்றார். அதே நேரம் காவல் நிலையம் வந்த சாந்தியும் ஆர்த்தியுடன் சண்டையிட்டார். காவல் நிலைய வாசலிலேயே பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டனர். ஒரு கட்டத்தில் ஆர்த்தியின் நைட்டியை, சாந்தி பிடித்து இழுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆர்த்தியும், அவரது சித்தி மகள் ராஜேஸ்வரி என்பவரும் சேர்ந்து, செங்கல்லால் சாந்தியின் தலையில் தாக்கினர். இதில் காயமடைந்த சாந்தி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் ஐந்து தையல் போடப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆர்த்தி, 27 மற்றும் ராஜேஸ்வரி, 26, ஆகியோரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ