ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி செம்பாக்கத்தில் பெண்கள் கபடி போட்டி
செம்பாக்கம் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் தெற்கு பகுதி தி.மு.க., சார்பில், பகுதி செயலர் சுரேஷ், 41வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ஏற்பாட்டில், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து, கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து, முதல் முறையாக பெண்கள் கபடி போட்டி நடத்தப்பட்டது. மார்ச், 15,16ல் பகல், இரவாக நடத்தப்பட்ட போட்டியில், 40 அணிகள் பங்கேற்றன.போட்டியை அமைச்சர் அன்பரசன், தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.முதல் இடம் பிடித்த, செயின்ட் ஜோசப் கல்லுாரி அணிக்கு, 72,000 ரூபாய்; இரண்டாம் இடம் பிடித்த, ஈரோடு பி.கே.ஆர்., கல்லுாரி அணிக்கு, 40,000 ரூபாய்; மூன்றாம் இடம் பிடித்த, தமிழக காவல் துறைக்கு அணிக்கு, 20,000 ரூபாய்; நான்காம் இடம் பிடித்த கரூர் சேரன் கல்லுாரி அணிக்கு, 20,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.இதைத்தவிர, நான்கு சிறந்த வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டு, 'வாஷிங் மிஷன், ப்ரிஜ், டிவி' ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.பகுதி செயலர் சுரேஷ், 41வது வார்டு கவுன்சிலர் கற்பகம், 42வது வார்டு கவுன்சிலர் கல்யாணி, 44வது வார்டு கவுன்சிலர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.