மெரினாவில் பாரம்பரிய வழித்தடம் மேம்படுத்தும் பணி துவக்கம்
சென்னை: மெரினாவில் பாரம்பரிய வழித்தடம் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை, மெரினா பாரம்பரிய வழித்தடம், 10 கோடி ரூபாய் செலவில் இரண்டு கட்டங்களாக மேம்படுத்தப்படும் என, சி.எம்.டி.ஏ., அறிவித்து இருந்தது. இந்நிலையில், மெரினா காமராஜர் சாலையில் உள்ள ஆவின் பாலகம் எதிரே மேம்படுத்தும் பணியை சி.எம்.டி.ஏ., ஒப்பந்ததாரர்கள் துவங்கி உள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அரசின் பாரம்பரிய கட்டடங்களை மின்விளக்குகளோடு அழகுபடுத்துவது, பாதை அடையாளங்கள் மற்றும் தகவல் பலகைகள், விளக்குகளுடன் கூடிய தெரு வடிவமைப்பு ஆகியவற்றுடன் மெரினா பாரம்பரிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது' என, தெரிவித்தனர்.