மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை வழங்கல்
20-Jul-2025
அம்பத்துார்: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம், அம்பத்துார் தொழிற்பேட்டையில் இருந்து, 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம், நேற்று அம்பத்துார் தொழிற்பேட்டையில் நடந்தது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அரசு செயலர் வீரராகவராவ் மற்றும் அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல் ஆகியோர் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை வழங்கினர். இம்முகாமில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், அம்பத்துார், கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவ - மாணவியர் என 135 பேர், பணி நியமன ஆணைகளை பெற்றனர். இரண்டாம் கட்ட தேர்வுக்கு, 153 பேர் தகுதி பெற்றனர்.
20-Jul-2025