உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரும்பு ராடு சரிந்து விழுந்து தொழிலாளி பலி

இரும்பு ராடு சரிந்து விழுந்து தொழிலாளி பலி

மணலி புதுநகர், விச்சூர் சிட்கோ தொழிற்பேட்டையில், பாலாஜி இன்ஜினியரிங் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, பீஹாரைச் சேர்ந்த ரோஷன் குமார், 22, என்பவர், பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, கிரேன் கொக்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி உரசியதில், 240 கிலோ அளவிலான 2 இரும்பு ராடுகள் விழுந்ததில், ரோஷன் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார். மணலி புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை