மேலும் செய்திகள்
தேங்கிய நீரில் மிதித்தவர் மின்சாரம் பாய்ந்து பலி
08-Sep-2024
ஓட்டேரி:மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப் தாஸ், 60. இவர், சென்னை பட்டாளம், ஸ்டாரன்ஸ் சாலையில் தங்கி, பெரம்பூரில் உள்ள துரித உணவகத்தில் சமையலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் வேலைக்கு வராததால், கடையின் உரிமையாளர் அவரது அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, ஜங்ஷன் பாக்ஸ் ஒயரில் மின்சாரம் பாய்ந்த நிலையில், கட்டிலில் உயிரிழந்து கிடந்தார்.தகவலறிந்த ஓட்டேரி போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
08-Sep-2024