மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி
06-Jul-2025
ஆவடி: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா, 28. சில நாட்களாக திருமுல்லைவாயில், அன்னை சத்யா நகரில், ஒரு வீட்டின் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தார்.நேற்று மாலை, கட்டுமானத்திற்கு தேவையான கம்பிகளை முதல் மாடிக்கு எடுத்து சென்றபோது, அருகில் சென்ற மின் கம்பியில் உரசி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமுல்லைவாயில் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
06-Jul-2025