உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

கொடுங்கையூர்:குப்பை பொறுக்கும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 30; கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கி வந்துள்ளார்.நேற்று அதிகாலை, கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர், டாஸ்மாக் கடை முன் சந்தேகத்திற்கிடமாக ஹரிகிருஷ்ணன், முகம் மற்றும் தலையில் ரத்த காயங்களுடன் அடிபட்டு கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை