குவாட்டர் பாட்டில் தராததால் தொழிலாளி மண்டை உடைப்பு
சென்னை, குவாட்டர் மது பாட்டிலை தர மறுத்ததால், சலவை தொழிலாளியின் மண்டையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மந்தைவெளி எஸ்.சி.பி., காலனி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம், 40; சலவைத் தொழிலாளி. இவர், இரு தினங்களுக்கு முன், மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே, டாஸ்மாக் கடையில், குவாட்டார் பாட்டில் வாங்கிக் கொண்டு, அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த நபர், திடீரென விநாயகத்திடம், 'மது குடிக்க வேண்டும்; குவாட்டர் பாட்டிலை கொடு' என, கேட்டுள்ளார். இதற்கு விநாயகம் மறுத்துள்ளார். அப்போதும், அந்த நபர் வழிவிடாமல் தடுத்து, 'மது பாட்டிலை தராவிட்டால் தாக்குவேன்' என, மிரட்டி உள்ளார். மிரட்டலை விநாயகம் கண்டுகொள் இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், கீழே கிடந்த காலி மதுபாட்டிலை எடுத்து, விநாயகத்தின் தலையில் அடித்து, பலத்த காயத்தை ஏற்படுத்திவிட்டு தப்பினார். பலத்த காயமடைந்த விநாயகம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, விநாயகத்தின் மீது தாக்குதல் நடத்திய, மயிலாப்பூரை சேர்ந்த சரவணன், 25 என்பரை நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். **